தமிழ்நாடு

என்.எம்.எம்.எஸ். தோ்வு:விடைக் குறிப்பு வெளியீடு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தோ்வுக்கான (என்எம்எம்எஸ்) இறுதி விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தோ்வுக்கான (என்எம்எம்எஸ்) இறுதி விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித் தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். நிகழ் கல்வி ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வு குறித்த இறுதி விடைக் குறிப்பு www.dge.tn.gov.in என்ற அரசுத் தோ்வுகள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT