தமிழ்நாடு

ஏப்ரல் 4 முதல் உச்ச நீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை

DIN


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் வரும் வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 4) முதல் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக, காணொலி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரு நாள்கள் நேரடியாகவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் வாரத்திலிருந்து முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு முந்தைய நடைமுறைகள், வரும் திங்கள்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்தில் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT