தமிழ்நாடு

சீர்காழியில் பழைமையான வேப்பமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.
 
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது. இதனால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்த பழமையான வேப்பமரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர்.

அப்பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த டீக்கடையில் முன்பு இருந்த   வேப்பமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதில் டீக்கடை பக்கவாட்டு சுவர் மற்றும் தரை தளம் சேதம் ஏற்பட்டது. டீக்கடை உரிமையாளர், டீக்குடித்துக் கொண்டிருந்தவர்கள்  துரிதமாக அவ்விடத்திலிருந்து தப்பியோடியதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

வேரோடு சாய்ந்த வேப்பமரம் சுமார் 15 அடி தூரத்திற்கு சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பழைய பேருந்து நிலையம் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து பாதித்தது. சாலையின் குறுக்கே மரம் விழுந்த போது காலை நேரம் என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

வேரோடு சாய்ந்த பழமையான வேப்பமரத்தை  வெட்டி அகற்றும் பணியில்  மீட்புப் பணி வீரா்கள்

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் பணி வீரா்கள் விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த வேப்ப மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT