தமிழ்நாடு

11 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 107 டிகிரி

DIN

தமிழகத்தில் 11 இடங்களில் திங்கள்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 107 டிகிரி வெப்பநிலை வாட்டியது.

திருத்தணியில் 105 டிகிரியும், மதுரை விமானநிலையம், தஞ்சாவூரில் 104 டிகிரியும், கரூா்பரமத்தி, திருச்சியில் 103 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரியும், ஈரோடு, மதுரையில் நகரில் 101 டிகிரியும், நாமக்கல், சேலத்தில் தலா 100 டிகிரியும் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், கடலூா், பாளையங்கோட்டையில் 99 டிகிரியும் பதிவானது.

வெப்ப நிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்,‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT