முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு: சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் நீதிபதிக்கு கடிதம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், நீதிபதிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 3 மே 2022, 2:20 pm IST
ஜெயராஜ்-பென்னிக்ஸ்
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், நீதிபதிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல்துறை விசாரணையின்போது தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும், பணியிலிருந்த 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில், பால்துரை என்பவர் கரோனாவால் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ஸ்ரீதர், மதுரை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

தன்னை தவிர மீதமுள்ள 8 பேர் தான் தந்தை, மகனை அடித்துக் கொன்றனர். இந்த விவகாரத்தில் நான் எதுவும் செய்யவில்லை. நான் உண்மையை பேசி வருவதால் மீதமுள்ள 8 பேரும் என் மீது கோபமாக உள்ளனர். கடந்த மார்ச் 26ஆம் தேதி காலை 6.30 மணியளவில் என்னைக் கொலை செய்ய முயற்சித்தனர்.

மேலும், நீதிமன்றம் அழைத்து வரும் போதெல்லாம் என்னை தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர். அதனால், நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது என்னை தனி வாகனத்தில் அழைத்து வர உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.