தமிழ்நாட்டில் புதிதாக 37 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. 15,811 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 37 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 58 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றும் தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
இதையும் படிக்க | தமிழக அரசு கட்டுப்பாட்டில் சிதம்பரம் நடராஜர் கோவில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
இதுவரை மொத்தம் 34,15,603 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 467 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களில் சென்னையில் அதிகளவாக 23 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.