அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, இந்த துறைகளுக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன.
இதற்கிடையே, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் இருக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், துணை வேந்தரை ஆளுநருக்கு பதிலாக முதல்வரே நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.