பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவிகள். 
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மதுரை மாவட்டத்தில் 40,411 பேர் எழுதுகின்றனர்

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 40, 411 போ், 150 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதி வருகின்றனர்.

DIN

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கிய நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 487 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 20, 653 போ், மாணவியா் 19, 758 போ் என மொத்தம் 40, 411 போ், 150 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதி வருகின்றனர். மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் மையத்திற்கு வந்து செல்ல கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் இந்தாண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 602 மாற்றுத்திறன் கொண்டோர் எழுதுகின்றனர். இதில் கண்பார்வை, மனவ ளர்ச்சி குன்றிய மற்றும்கை ஊனமுற்ற மாணவ, மாணவியர் 317 பேருக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனித்தேர்வர்கள் 2,149 பேர் 8 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 9 புதிய தேர்வு மையங்களும் அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் மையத்திற்கு வந்து செல்ல கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகளுக்கு கண்காணிப்பு பணிகளுக்காக 265 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 265 துறை அலுவலர்கள் 125 கூடுதல் துறை அலுவலர்கள், 3,929 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 600 நிலையான பறக்கும்படை, 9 ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வை கண்காணிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT