முகப்பு
தமிழ்நாடு

சேலம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷக விழா தொடங்கியது

சேலம் முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபம் மகா கும்பாபிஷக விழா தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

சேலம் முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபம் மகா கும்பாபிஷக விழா தொடங்கியது.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டப மகா கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை மிக விமரிசையாக நடைபெற உள்ளது. 

3 நாள்கள் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் முதல் நாள் நிகழ்ச்சிகள்  இன்று காலை 5 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்கியது. நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோயில் முன்பிருந்து தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் தொடங்கியது.

1,008 தீர்த்த குடங்களுக்கு வரசித்தி விநாயகர் கோயிலில் உரிய பூஜைகள் நடத்தப்பட்டு தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டப டிரஸ்டி மோகன் குமார் தொடங்கி வைத்தார்.

இதில் கேரள செண்டை மேளத்துடன் தய்யம் ஊர்வலம் நடைபெற்றது. சிவன், பார்வதி, முருகர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட கடவுள் வேடங்களை தரித்தபடி பக்தர்கள் நடனம் ஆடியபடி தய்யம் ஊர்வலமாக வந்தது பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

மேலும் பாரம்பரிய சிலம்பக் கலையை போற்றிடும் வகையில், மாணவர்கள் சிலம்பம் ஆடிய படி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  பசு மற்றும் குதிரையுடன் முளைப்பாரி ஊர்வலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் வரசித்தி விநாயகர் கோயில் முன்பு தொடங்கி திருவகவுண்டனூர் ஜங்ஷன் பிரதான சாலை வழியாக முல்லைநகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் நிறைவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →