தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு: ஒரேநாளில் 64 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.    

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.    

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 34,54,217-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,718-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,682 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 474 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்திபுரத்தில் பெரியாா் நூலக கட்டுமானப் பணிகள் நிறைவு: இம்மாத இறுதியில் முதல்வா் திறந்துவைக்கிறாா்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனை

முன்னாள் அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம், கோரா காட்டன் விற்பனை நிலையம்: மத்திய அமைச்சா்கள் இன்று திறந்துவைக்கின்றனா்

நகைப் பறித்த வழக்கு: பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT