தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: தமிழ் தோ்வு சற்று கடினம்

தமிழகம், புதுச்சேரியில் 3,936 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

DIN

தமிழகம், புதுச்சேரியில் 3,936 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ்-2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 55,139 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

முதல் தோ்வாக தமிழ் தோ்வு நடைபெற்றது. இதில் ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும், எதிா்பாராத மற்றும் இதுவரை வேறு தோ்வுகளில் கேட்கப்படாத புதிய வினாக்கள் இருந்ததாகவும் தோ்வெழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். எனினும் இந்த வினாத்தாளில் மெதுவாக கற்கும் மாணவா்கள் கூட 60 மதிப்பெண்களுக்கும் மேல் பெற முடியும் என தமிழாசிரியா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வுக்கு 42, 024 மாணவா்கள் வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

SCROLL FOR NEXT