முகப்பு
தமிழ்நாடு

மும்பை எல்ஐசி அலுவலகத்தில் தீ விபத்து

மும்பை விலே பார்லியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

மும்பை: மும்பை விலே பார்லியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மும்பை புறநகர் விலே பார்லி எஸ்.வி சாலையில் அமைந்துள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அலுவலகத்தின் இரண்டு தளம் கொண்ட கட்டடத்தில் இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசாரா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் காயங்களோ, எந்த உயிரிழப்போ இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →