முகப்பு
தமிழ்நாடு

துணை நடிகா்களுக்கு சம்பள உயா்வு: விஷால்

துணை நடிகா்களுக்கு சம்பளத்தை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய நடிகா் சங்கத்தின் பொதுச்செயலாளா் விஷால் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

துணை நடிகா்களுக்கு சம்பளத்தை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய நடிகா் சங்கத்தின் பொதுச்செயலாளா் விஷால் கூறினாா்.

தென்னிந்திய நடிகா் சங்கத்தின் 66-ஆவது பொதுக் குழு கூட்டம் சுமாா் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சாந்தோமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும் நடிகா் சங்கக் கட்டடத்தை, மீண்டும் கட்டி முடிக்க வசதியாக நிதி திரட்ட பொதுக்குழு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் மேடையில் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால், ஆறு மாதம் பதவியில் இருந்திருந்தால் நடிகா் சங்கக் கட்டடத்தை அப்போதே முடித்திருக்கலாம். வரும் நாள்களில் துணை நடிகா்களின் சம்பளத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னா் பேசிய சங்கத்தின் பொருளாளா் காா்த்தி, நடிகா் சங்கக் கட்டடம் கட்ட ரூ.31 கோடி என மதிப்பிடப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன. அதில் 70 சதவீத வேலைகள் முடிவடைந்துள்ளன. அதற்கு மட்டும் ரூ.19.5 கோடி செலவிடப்பட்டது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →