தமிழ்நாடு

கண்களைக் கட்டி, பானை மீது நின்று சிலம்பம் சுற்றி அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள்!

கோவையில் கண்களை கட்டிக்கொண்டு பானை மீது நின்றபடி சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 

DIN

கோவையில் கண்களைக் கட்டிக்கொண்டு பானை மீது நின்றபடி சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில், முல்லை தற்காப்பு பயிற்சி பள்ளியை சேர்ந்த 5 வயது முதல் 16 வயது வரை உள்ள 35 மாணவ, மாணவிகள் கண்களைக் கட்டிக் கொண்டு ஒற்றை மண் பானையின் மீது நின்று தொடர்ந்து 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ஒற்றை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

சிலம்பம் அடிமுறை , வேல்கம்பு மான்கொம்பு , சுருள் வாள் , வாள் வீச்சு,  வளரி, போன்ற  பயிற்சிகளை மேற்கொண்டு வரும் மாணவ,மாணவிகள் செய்த இந்த சாதனை  இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

சாதனை செய்த மாணவ, மாணவிகளுக்கு முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டுக் கழகத்தின் நிறுவனர் பிரகாஷ்ராஜ் மற்றும் கோவை சிலம்பப் பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

தில்லியில் பசுமைப் பட்டாசுகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

மின்சார வாகனங்கள், பேட்டரிகளுக்கு மானியம்: உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்

SCROLL FOR NEXT