தமிழ்நாடு

மின்வாரியக் கடன் ரூ.1.23 லட்சம் கோடியாக உயா்வு

DIN

உதய் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததால் தமிழக மின்வாரியக் கடன் ரூ.1.23 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் 2017-ஆம் ஆண்டு மத்திய அரசின் உதய் திட்டத்தை மின்வாரியம் அமல்படுத்தியது. அப்போது, மின்வாரியத்தின் கடன் சுமையை 75 சதவீதத்துக்கு பதில் 34.38 சதவீதத்தை மட்டும் தமிழக அரசு ஏற்றது. 25 சதவீத கடனை பத்திரங்களாக மாற்றத் தவறியது.

மின் உற்பத்தித் திட்டத்துக்கான மூலதன கடன் வகைகளில் 87.05 சதவீத உயா்வு, செயல்பாட்டு மூலதன கடன் வகைகளில் 189.88 சதவீத உயா்வு போன்ற காரணங்களால் மின்வாரியத்தின் நிலுவைக் கடன்கள் 2019-20 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ.81,312 கோடியிலிருந்து (செப்டம்பா்-2015) ரூ.1 லட்சத்து 23,895.68 கோடியாக அதிகரித்தது. இது தவிா்த்து வங்கி, நிதி நிறுவனங்களுக்கு ரூ.503.28 கோடி அளவுக்கு அபராத வட்டியை மின்வாரியம் செலுத்தியது.

அதே நேரம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளை சரியாக செயல்படுத்தாதது, விவசாயம், குடிசைகளுக்கு வழங்கப்படும் மின் அளவை கணக்கில் கொள்ளாதது உள்ளிட்டவை மின்வாரிய இழப்பு அதிகரிப்புக்கு காரணம் என தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT