தமிழ்நாடு

அசானி புயல்: தமிழகத்தில் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை:  தமிழகத்தின் அனேக இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாள்களில் லேசான மழை பெய்யும் மற்றும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

'அசானி' புயல், காக்கிநாடா - விசாகப்பட்டணம் கடற்கரையை கடந்து, மேலும் வலுவிழந்து புயலாக மாறும்.

இந்த புயல் வடக்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வியாழக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐஎம்டி மண்டல வானிலை முன்னறிவிப்பு மைய இயக்குனர் பி.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: இன்று மழையின் தீவிரம் குறைந்து, நாளை  ஆந்திராவுக்கு வடக்கே நகர்வதால் அசானி புயலின் தாக்கம் ஓரிரு நாள்கள் மட்டுமே இருக்கும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது மற்றும் ஆசானி புயல் தாக்கம் காரணமாக வெப்பம் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT