சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில்  அசத்தலாக ஒயிலாட்டம் ஆடிய பெண்கள். 
தமிழ்நாடு

புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: சிறுவர் சிறுமியர் ஒயிலாட்டம்

சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

DIN

சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டு கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆட்டம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக  ஒயிலாட்டம் உள்ளது. இளம் தலைமுறையினர் தற்போது ஆர்வமாக இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர். இக்கலையை, ஈரோடு உள்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில், கருமத்தம்பட்டி சங்கமம் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் தொங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஒயிலாட்டம் ஆடிய ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்.

இந்நிலையில், ஒயிலாட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி மாரியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய ஒயிலாட்ட கலை பயிற்சி பெற்ற குழுவினரின் இசை முழங்க கூடி நின்று ஒயிலாட்டம் நடத்தியது கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 

கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள்  இசையுடன் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர் வரை உற்சாகத்துடன் நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இசைக்கு ஏற்றவாறு சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர் வரை ஒயிலாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தொலைநிலைக் கல்விச் சோ்க்கை செப். 15 வரை நீட்டிப்பு

அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பு: டிஜிபி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்?

SCROLL FOR NEXT