தமிழ்நாடு

தாமஸ் கோப்பை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்தியா தாம்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ளது:  மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

DIN

தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்தியா தாம்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ளது. இந்த உண்மையான வலாற்று வெற்றியை பெற்றுத்தந்த வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தோனேஷிய அணியை, இந்தியா எதிர்கொண்டது. அதில் 3-0 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஆணவக் கொலைகளை திருமா ஆதரிக்கிறாரா?திமுகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT