பேரறிவாளன் வழக்கில் நாளை (மே 18) தீர்ப்பு
பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (மே 18) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (மே 18) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவிவேதி, பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் ஆகியோா் வாதிட்டனா். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நாளை (மே 18) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கவுள்ளது.