ஓபிஎஸ், இபிஎஸ் 
தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலை அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ் -இபிஎஸ் அறிக்கை

அதிமுக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அடித்தளமாகும் என்றும் இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றிதான் என்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்

DIN

அதிமுக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அடித்தளமாகும் என்றும் இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றிதான் என்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்துள்ளனர். 

அதிமுக தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது.

பேரறிவாளன் மற்றும் அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில  அமைச்சரவையின் தீர்மானத்தின்படி 7 பேரையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும் என 2014 பிப்ரவரி மாதம் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை ஜெயலலிதாவும் அவரைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டில் அவர் வழிநடந்த கழக அரசும் துணிச்சலாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு அடித்தளமாகும். இது முழுக்க முழுக்க அதிமுகவிற்கு கிடைத்த வெற்றிதான் என்பதைஎடுத்துக்கூற  கடமைப்பட்டு இருக்கிறோம். 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT