முகப்பு
தமிழ்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பேரறிவாளன் சந்திப்பு

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை இன்று தனது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பேரறிவாளன் சந்திப்பு
பகிர்:

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை இன்று தனது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுநர் முடுவெடுக்காமல் காலதாமதம் செய்து வருவதை எதிர்த்து பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வெளியானது. பேரறிவாளனை விடுதலை செய்து வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தன்னுடைய விடுதலைக்கு ஆதரவளித்ததற்காக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.