பேரறிவாளன் முறைப்படி விடுதலை: சிறைத்துறை அறிவிப்பு
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி பேரரறிவாளன் முறைப்படி விடுதலை செய்யப்பட்டதாக தமிழக சிறைத்துறை அறிவித்தது.
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி பேரரறிவாளன் முறைப்படி விடுதலை செய்யப்பட்டதாக தமிழக சிறைத்துறை அறிவித்தது.
இது குறித்த விவரம்: முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிபிஐயால் பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி பேரறிவாளன் முறைப்படி விடுதலை செய்யப்பட்டதாக டிஜிபி சுனில்குமாா் சிங் புதன்கிழமை இரவு அறிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு:
உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின்படி பேரறிவாளனை விடுதலை செய்யவும், அவருக்கான பிணைப் பத்திரத்தினை ரத்து செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, பேரறிவாளனது பிணைப் பத்திரம் ரத்து செய்யப்பட்டு புழல் மத்திய சிறை-1-ல் தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு விடுதலை செய்யப்பட்டாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.