தமிழ்நாடு

கை கொடுத்த பேரறிவாளன்; தோள் கொடுத்த மு.க. ஸ்டாலின்

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

DIN


சென்னை: உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று தனது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க பேரறிவாளனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தனது தாய், தந்தையுடன் பேரறிவாளன் சந்தித்தார்.

முதல்வரை சந்தித்த பேரறிவாளன் தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் கைகுலுக்க கையை நீட்டினார். அவருக்கு கைகொடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பேரறிவாளனை நெருங்கி கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறகு, உடன் வந்த அற்புதம்மாளை பார்த்ததும், அவரது இரு கரங்களைப் பிடித்துக் கொண்டு, அவருக்கும் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் மிகவும் வாஞ்சையோடு பகிர்ந்து கொண்டார் முதல்வர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில், தனது விடுதலைக்கு பேருதவியாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சென்னை வந்த பேரறிவாளன், தனது தாய் மற்றும் தந்தையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் சார்பில் மிகவும் ஆணித்தரமான வாதங்களை முன் வைத்து, தனது விடுதலைக்கு உதவியமைக்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

ஓட்டுநர்கள் கவனத்திற்கு!!! கார் மேற்கூரை வழி எட்டிப்பார்த்த சிறுவன் பலத்த காயம்!

ம.பி.யில் போலீஸார் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து: ஒருவர் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT