தமிழ்நாடு

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நெல்லை இளைஞர் கைது

DIN


சென்னை விமான நிலையம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லை இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு  அண்மையில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அடுத்த சில நிமிஷங்களில் அது வெடித்து சிதறும் என்றும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளாா்.

இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸாா், உடனடியாக இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து தேனாம்பேட்டை போலீசார் சைபா் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை செய்தனா்.

போலீசார் விசாரணையில், அந்த அழைப்பில் பேசியது நெல்லை மாவட்டம் சுத்தமில்லி கிராமத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பது தெரியவந்தது. 
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் தாமரைக்கண்ணனை கைது செய்தனா்.

விசாரணையில், தாமரைக்கண்ணன் கஞ்சா போதையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்து. 

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT