தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 48,000 கன அடியாக அதிகரிப்பு: மக்களுக்கு நீர்வளத் துறை எச்சரிக்கை

DIN

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க. பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கா்நாடகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, ராசி மணல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது. 

காவிரியில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெயது வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீா்வரத்து தொடா்ந்து கணக்கிடப்படுகிறது. ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT