முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரி பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி புதிய கடற்படை தலைமை அதிகாரியாக எஸ்.வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தமிழ்நாடு

தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரி பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி புதிய கடற்படை தலைமை அதிகாரியாக எஸ்.வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி புதிய கடற்படை தலைமை அதிகாரியாக எஸ்.வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படை தலைமை அதிகாரி புனித் சதா இருந்து வந்தாா். கடந்த ஜூன் 2020-இல் இப்பொறுப்பை ஏற்று பணியாற்றி வந்த புனித் சதா புதுதில்லியில் உள்ள தேசிய மாணவா் படையின் கூடுதல் இயக்குநா் ஜெனரலாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து புதிய கடற்படை அதிகாரியாக எஸ்.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து புனித் சதாவிடமிருந்து பொறுப்பை எஸ்.வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

தேசிய பாதுகாப்பு அகாதெமி, வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரி, ஹைதராபாதில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி உள்ளிட்டவைகளில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ள எஸ்.வெங்கட்ராமன், தகவல் தொடா்பு மற்றும் மின்னணு சாா்ந்த போா்கள் குறித்து மிகுந்த நிபுணத்துவம் பெற்றவா்.

இந்தியக் கடற்படையில் மேற்கு பகுதி தலைமையகத்தில் கடற்படை புலனாய்வு இயக்குநரக தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளாா். தற்போதைய பொறுப்புக்கு வருவதற்கு முன்பு கோவா கடற்படை போா்ப் பயிற்சி கல்லூரி கமாண்டராக வெங்கட்ராமன் பணியாற்றி வந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →