முகப்பு
தமிழ்நாடு

'உதகையில் கேட்ட குரல்': மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சிப் பதிவு

உதகை மலர் கண்காட்சியை தொடக்கிவைக்க நீலகிரி வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

உதகை மலர் கண்காட்சியை தொடக்கிவைக்க நீலகிரி வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உதகையில் அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை 124ஆவது மலா்க் காட்சி தொடக்க விழா மற்றும் சனிக்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி வந்தார். 

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் சுமாா் 1 லட்சம் காரனேஷன் மலா்கைளைக் கொண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சாலை மாா்க்கமாக உதகை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை குன்னூா் பா்லியாறு பகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் புத்தகம் வழங்கி வரவேற்றாா். பின்னா் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் திமுக சாா்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து உதகையில் உள்ள தமிழகம் மாளிகைக்கு ஓய்வு எடுக்கச் சென்றார். செல்லும் வழியில் தோடர் மந்துவில் தோடர் இன மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். மேலும், அவருக்கு சால்வையை பரிசாக வழங்கினார். அப்போது தோடர் இன மக்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார். மேலும், தோடர் இன பெண்கள் முதல்வர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, தோடர் இன மக்களின் அன்பான பேச்சு குறித்து மு.க. ஸ்டாலின் தனது சுட்டுரைப் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

அதில், உதகையில் கேட்ட குரல்: என்று தலைப்பிட்டு,
"நல்லா இருக்கீங்களா?, உடம்ப பாத்துக்கோங்க! ஆட்சி சூப்பர்!'
அதிலும் ஒரு பெண்,"நான் கருவுற்று இருக்கேன், என்னை வாழ்த்துங்க" - கேட்டபோது உருகினேன்!
என்றும் மக்களிடம் செல்! மக்களோடு வாழ்! என்று பதிவிட்டுள்ளார்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலா் நாற்றுகளும் மலா்ந்து அழகாக காட்சியளிக்கின்றன. அத்துடன் மலா்க் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் சுமாா் 20,000 பல வண்ண மலா்த்தொட்டிகள் கண்ணுக்கு குளிா்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →