தமிழ்நாடு

விலை குறைக்காமல் காரணம் கூறும் திமுக அரசு: அண்ணாமலை

DIN


திமுக அரசு அரசியல் லாபத்திற்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது காரணம் கூறி வருவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: 

"எந்தவொரு பட்ஜெட்டிலும் பெட்ரோல், டீசல் குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்காமலே நாங்கள் விலையைக் குறைத்து வருகிறோம். ஆனால், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 5 குறைக்கப்படும் என்றும், ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்படும் என்றும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தார்கள். இதை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

இதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலை ஏன் குறைக்கவில்லை என்று நிதியமைச்சரிடம் (தமிழ்நாடு நிதியமைச்சர்) கேட்டபோது, பெட்ரோலுக்கு மட்டும் 5 ரூபாய் சொன்னோம் 3 ரூபாய் குறைக்கிறோம் என விலை குறைத்தார். அவர்கள் வாக்குறுதியளித்த 5 ரூபாய் குறையாது. 

டீசல் விலை குறைக்கவில்லையே ஏன் எனக் கேட்டதற்கு, டீசல் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பயனாளிகள் குறித்து கணக்கெடுத்துக் கொண்டிருப்பதால், அது குறைக்கப்படவில்லை என்றார். இதைக் கூறி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபிறகும், நிதியமைச்சர் புதிய காரணத்தினைக் கூறுகிறார்.

2014-க்குப் பிறகு மாநில அரசு மதிப்புக் கூட்டு வரி மூலம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7 அதிகப்படுத்தியிருக்கிறது. 2014-இல் பெட்ரோலியம் மூலமாக ரூ. 12 ஆயிரம் கோடி மாநிலத்திற்கு வருவாய் இருந்தது. தற்போது ரூ. 19 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. 2017-இல் புதிய விதிமுறை மாற்றப்பட்டு அதன்மூலம் நிறைய சம்பாதிக்கின்றனர். அதுகுறித்து நிதியமைச்சர் பேசவில்லை.

தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது, பாஜகவிடம் கருத்து கேட்டபிறகா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்? அரசியல் லாபத்திற்காக விலை குறைப்பதாகக் கூறிவிட்டு, காரணம் கூறி வருகின்றனர்" என்றார் அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT