கோப்புப் படம். 
தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்க்கடன்கள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்க்கடன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்க்கடன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை’ சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் வேளாண்துறை சார்பில் ரூ.227 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும். 

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணியில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்கிறேன். வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை அரசு பெருமைப்படுத்துகிறது. விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்க்கடன்கள் வழங்கப்படும். கிராமங்கள் தன்னிறைவு பெறும், நகரங்களை நோக்கி நகர்வது தடுக்கப்படும். 

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இருபோக சாகுபடியை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமய்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: இருவா் கைது

ஷாஹ்தராவில் ஒரு வீட்டில் சகமாரியான துப்பாக்கிச் சூடு: ரூய30 லட்சம் கொள்ளை

இளையான்குடி அருகே ஜாதி தலைவா்களின் பெயா்ப் பதாகைகள் வைப்பதில் மோதல்: 115 போ் மீது வழக்கு

மோத்தி நகரில் ஆண் சடலம் மீட்பு

தெளலகுவானில் அரசுப் பேருந்து தீப்பற்றி விபத்து

SCROLL FOR NEXT