தமிழ்நாடு

என்ன செய்தார் எடப்பாடி பழனிசாமி? சொந்த மாவட்டத்திலேயே சாடிய மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது சொந்த மாவட்டத்திற்காக அல்லது தொகுதிக்காக என்ன செய்தார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது சொந்த மாவட்டத்திற்காக அல்லது தொகுதிக்காக என்ன செய்தார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், மக்களுக்கு சேவை செய்யவே நேரம் போதவில்லை என்பதால் தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. விருப்பமும் இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் நாள்தோறும் அறிக்கை விடுவதில் தவறில்லை. ஆட்சியில் இருந்தபோது பழனிசாமி என்ன செய்தார்.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. சேலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஜவுளிப்பூங்கா, கொலுசு உற்பத்தி மையம், ஐடி பூங்கா அமைக்கப்படும். 

சேலம் மாவட்ட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு என்ன செய்துவிட்டார் என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் கோயிலில் தங்கத்தோ் கிரி வீதி உலா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

நாசரேத் அருகே மேளக் கலைஞா் தற்கொலை

வெள்ளநீா் கால்வாய்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

SCROLL FOR NEXT