தமிழ்நாடு

கொடைக்கானலில் கோடை விழா: மலா் கண்காட்சி தொடக்கம்

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 59 ஆவது கோடை விழா இன்று தொடங்கியது. இன்று தொடங்கியிருக்கும் இந்த கோடை விழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறவிருக்கிறது.

59ஆவது கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சாா்பில் இன்று தொடங்கிய மலர் கண்காட்சி 29 ஆம் தேதி வரை  நடைபெறவுள்ளது. 

அதேபோல் சுற்றுலாத் துறை சாா்பில் இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது. இதனையொட்டி பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், படகு அலங்காரப் போட்டி, மீன்பிடித்தல் போட்டி, பாரம்பரிய வீர விளையாட்டுப் போட்டிகள், நாய்கள் கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன. 

கோடை விழாவில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவது வழக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT