தமிழ்நாடு

சென்னையில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை

DIN

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையடுத்து டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாதில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 5.45 மணியளவில் வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நிறைவடைந்த 5 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்நிலையில், சென்னையில் இன்று டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT