தமிழ்நாடு

'தமிழக மக்கள் மனதார வரவேற்கின்றனர்' - பிரதமர் வருகை குறித்து ஆளுநர் ட்வீட்

தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் நன்றி தெரிவித்து வரவேற்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

DIN

தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் நன்றி தெரிவித்து வரவேற்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(வியாழக்கிழமை) தொடக்கி வைக்கிறார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பிரதமரின் தமிழகம் வருகையையொட்டி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றுள்ளார். 

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் நரேந்திர மோடியை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

கி(ளி)க்... சைத்ரா அச்சார்!

கடலூர் ரசாயனக் கசிவு விபத்து: பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆலை நிர்வாகம் அலட்சியமா?

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

SCROLL FOR NEXT