தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: அரசாணை வெளியீடு

DIN

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் தொகுதி 1, 2 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில், முதன்மை எழுத்துத்தேர்வான கட்டாய தமிழ்மொழித்தாள் தகுதி தேர்வில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விலக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் மற்ற தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும். 

40 சதவிகிதத்துக்கும் குறைவான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பொருந்தும். 

இவ்விலக்கினைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT