தமிழ்நாடு

மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதமே குறிக்கோள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

DIN

திருவாரூர்: மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோளாக உள்ளது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினார்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, அவருக்கு மேள தாளம், பொய்க் கால் குதிரை ஆட்டம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் பங்கேற்றுள்ளவர்கள். 

தொடர்ந்து மேடைக்கு வந்தார். அங்கு முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

பின்னர், அவர் புதிய கல்விக் கொள்கையின் அவசியம், முக்கியத்துவம் குறித்தும் விளக்கிப் பேசியபின், இந்தியாவில் பல மொழிகள் பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோளாக உள்ளது என்றார். 

கருத்தரங்கில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் ஏ.பி.தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக மற்றும் பாதகமான அம்சங்களை கலந்தாலோசனை செய்து, சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்வதற்காகவே 2 நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில், நாட்டில் உள்ள 38 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், என்ஐடி மற்றும் ஐஐடி இயக்குநா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனர்.

மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கவேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய் தகவல்களைக்  கூறி  வாரிசுரிமைச் சான்றிதழ்: குற்ற வழக்குப் பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

துளிகள்...

ஆசிரியா் கலந்தாய்வுக்கு 13,484 போ் விண்ணப்பம்

கடன் வரம்புக்கு எதிராக கேரள அரசு மனு: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிட பரிசீலனை

காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு

SCROLL FOR NEXT