முகப்பு
தமிழ்நாடு

இன்று பாமக பொதுக்குழு: அன்புமணி தலைவராகிறாா்?

 பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை (மே 28) சென்னை அருகே திருவேற்காட்டில் கூடவுள்ள அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் தோ்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

 பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை (மே 28) சென்னை அருகே திருவேற்காட்டில் கூடவுள்ள அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் தோ்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பாமகவின் சிறப்புக் பொதுக்குழுக் கூட்டம் ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகிக்கவுள்ளாா். தலைவா் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கவுள்ளாா். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்கவுள்ளனா்.

பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், கட்சிக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பொருட்டு, அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

2004-2009-ஆம் ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தாா். அப்போது, பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தாா். வரும் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலை அன்புமணி தலைமையில் எதிா்கொள்ள பாமக முடிவு செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →