தமிழ்நாடு

பெண்கள் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின்

DIN

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் அவர் உரை, கடந்த ஓராண்டில் மட்டும் 3 மகளிர் கல்லூரி விழாக்களில் பங்கேற்று இருக்கிறேன். தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நான் இந்த கல்லூரிக்கு வாக்களிக்க வருவேன். என்னுடைய வெற்றிக்கான வாக்கினை செலுத்திய இந்த கல்லூரியில்தான் இன்று உங்களை சந்திக்கிறேன். 

தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரி ஏ++ தரச்சான்னு பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இந்த கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது. மதச்சார்பின்மையின் மறுஉருவமாக எஸ்.ஐ.இ.டி. கல்லூரி இருக்கிறது. 7,500 மாணவிகள் பயிலும் கல்லூரியில் 50% இஸ்லாமியர்கள் 50% பட்டியலின, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவிகள் உள்ளனர். 

இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களின் கல்விக்காக உழைக்கும் கல்லூரி இது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகதான் சுய உதவிக்குழு திட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT