தமிழ்நாடு

திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 67 பேர் கைது

DIN


திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 67 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நூல் விலை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தக்கோரி திங்கள்கிழமை (மே.30) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர்

இந்த அறிவிப்பின்படி, எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் பஷீர் அஹமது தலைமையில் அக்கட்சியினர் ரயில் நிலையம் முன்பாகத் திரண்டனர். இதன் பிறகு ரயில் மறியலை முற்றுகையிடுவதற்காக ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல் துறையினர் இரும்புத்தடுப்புகளைக் கொண்டு தடுக்க முயன்றனர். ஆனால், இரும்புத் தடுப்புகளைத் தகர்த்தெரிந்து ரயில் தண்டவளாத்தில் அமர்ந்த மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

முன்னதாக, காவல் துறையினருக்கும், எஸ்டிபிஐ கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இதையடுத்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேரையும் கைது செய்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT