சென்னையில் அதிகபட்ச மழை பதிவானது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை நகரின் வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1 தேதி கனமழை(80 .4 மி மீ) பதிவானது இன்று மூன்றாவது முறை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழையின் அளவு அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.