தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசிவருகிறார். 

DIN


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசிவருகிறார். 

இரண்டு நாள்கள் பயணமாக சென்னை வந்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

மேற்கு வங்க இல.கணேசனின் அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். 

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை புரிந்தார். அவரை மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படத்தை வணங்கி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இதில், நாடாளுமன்ற தேர்தல், மாநில கட்சிகள்  பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்று, பொதுக்கூட்டத்திலும் உரையாற்றியிருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

நவோனியா திருட்டுக் கும்பலின் உத்தி என்ன? செல்போன் திருட்டில் கைதேர்ந்தவர்கள்!!

தமிழக டிஜிபி நியமனம் விவகாரத்தை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சிறையிலிருந்து வந்து வாக்களித்த எம்பி ரஷீத்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

SCROLL FOR NEXT