முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 நவம்பர், 2022 at 9:28 PM
பகிர்:


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. 

Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கடலோரப் பகுதிகள் உள்பட உள் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதனிடையே, நாளை 14 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.