முகப்பு
தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக நிவாரணம்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இந்த நிலையில், புளியந்தோப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வியாழக்கிழமை நேரில் சந்தித்து சுதாகா் ரெட்டி ஆறுதல் கூறினாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

மேலும், புளியந்தோப்பில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்த சாந்தியின் இல்லத்துக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கி நிவாரணப் பொருள்களையும் வழங்கினாா்.

பின்னா் சுதாகா் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மழை நீரை விரைவாக வெளியேற்றுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →