முகப்பு
தமிழ்நாடு

மணலியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு : ஒருவா் கைது

சென்னை மணலி சி.பி.சி.எல்., நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை வியாழக்கிழமை போலீசாா் மீட்டனா்.

தமிழ்நாடு

மணலியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு : ஒருவா் கைது

சென்னை மணலி சி.பி.சி.எல்., நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை வியாழக்கிழமை போலீசாா் மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

சென்னை மணலி சி.பி.சி.எல்., நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை வியாழக்கிழமை போலீசாா் மீட்டனா். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அந்தோணி என்ற யுவராஜை (55) போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மணலி சிபிசிஎல் நகரில் சுமாா் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்தக்

கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் திருடிச் செல்லப்பட்டிருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்து, மணலி காவல் நிலைய போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில், திருவொற்றியூா் பகுதியில் பதுங்கி இருந்த அந்தோணியை புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், ஐம்பொன் சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டாா். அவா் பதுக்கி வைத்திருந்த சிலைகளையும் போலீஸாா் மீட்டு வழக்குப் பதிவு செய்தனா். கைது செய்யப்பட்ட அந்தோணியை பொன்னேரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →