தமிழ்நாடு

இல. கணேசன் இல்ல விழாவில் ரஜினி பங்கேற்பு!

சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் பிறந்தநாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். 

DIN

சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் பிறந்தநாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். 

மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்தார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இன்று இல. கணேசனின் இல்ல விழாவில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டுள்ளார். 

இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றுள்ளார். ரஜினிகாந்தின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாஜக நிர்வாகிகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT