திருவள்ளூர் பகுதியில் இடி, மின்னலுடன் மழை: 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
திருவள்ளூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளதை அடுத்து மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏரிக்கான கால்வாய்களில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக விடாமல் மழை பெய்து வந்ததது. வியாழக்கிழமை பகலில் வெயில் அடித்த நிலையில், இரவில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. திருவள்ளூர் பகுதியில் மழையால் விளைநிலங்களில் பயிர்கள் அனைத்தும் செழிப்பாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் ஆவடி, திருவள்ளூர், செங்குன்றம், சோழவரம், ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இதையும் படிக்க | ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக அதிரடியாக உயர்வு!
திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான பதிவு விவரம் மி.மீட்டரில் வருமாறு: செங்குன்றம் - 68, ஆவடி- 60, திருவள்ளூர் - 56, சோழவரம், திருவாலங்காடு தலா - 45, ஜமீன்கொரட்டூர் - 37, பூண்டி - 27, தாமரைபாக்கம், ஆர்.கே.பேட்டை தலா - 17, கும்மிடிப்பூண்டி}6, பொன்னேரி - 5 என மொத்தம் 399 மி.மீட்டரும், சராசரியாக 26 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை: வடகிழக்குப் பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்திருவள்ளூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.கிழமையும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.