திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனா்.
துபையில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு இண்டிகோ விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொண்டபோது, அவர் கொண்டு வந்த உடமைகளுக்குள் (ஆடைக்குள்) மறைத்து வைத்திருந்த 251 கிராம் கம்பி வடிவிலான தங்கம் பிடிப்பட்டது.
இதையும் படிக்க | மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்: 1.75 லட்சம் டன் இலக்கு நிர்ணயம்!
இதனையடுத்து அந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.12.84 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.