தமிழ்நாடு

உணவகங்களில் சிசிடிவி பொருத்தக் கோரிய மனு தள்ளுபடி

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் கண்காணிப்பு கேமிரா(சிசிடிவி) பொருத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

மேலும், 2019ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழகத்தில் நடத்திய ஆய்வில் 12 சதவிகிதத்திற்கும் மேலான உணவகங்கள் போதுமான தரத்துடன் செயல்படவில்லை எனத் தெரிய வந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பல உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து இடங்களிலும் மனு தாரரின் கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT