ஆளுநர் ஆர்.என்.ரவி 
தமிழ்நாடு

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

DIN

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளதாக அறிவித்த திமுக, பிற கட்சிகளும் மனுவில் கையெழுத்திட அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அந்த மனுவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவதாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

SCROLL FOR NEXT