திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி; 13 பேர் காயம்
திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
மதுரை திருமங்கலம் அடுத்த அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் முழுவதும் தரைமட்டமானது. இதில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் வெடித்துச் சிதறி பலியாகினர். இவர்கள் அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா என தெரிய வந்ததுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரை மற்றும் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் நேரடியாக வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.