முகப்பு
தமிழ்நாடு

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகனமழை காரணமாக சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Updated On : 10 நவம்பர், 2022 at 9:31 PM
பகிர்:

அதிகனமழை காரணமாக சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மிகக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டது.

இந்த சூழலில் நாளை (நவம்பர் 11) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, நாகை, வேலூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.